KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

பிலோ இருதயநாத் நூல்கள் #16

Closed tshrinivasan closed 4 years ago

tshrinivasan commented 5 years ago

Philo Irudhayanath

https://ta.wikipedia.org/s/1p21

http://www.sramakrishnan.com/?p=546

இவரது நூல்களை சேகரிக்க வேண்டும்.

tshrinivasan commented 5 years ago

http://googleda.com/tag/philo-irudhayanath/

https://getch.wordpress.com/about-2/ Manoj is grandson of Philo Irudhayanath

Found his mail id at ilugc mailing list archives. http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc/2010-September/060362.html

micman.manoj at yahoo.co.in this mail id is not available now.

https://getch.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/ from this post, got his new email id micman.manoj at gmail.com

sent a mail to him asking to talk to him on Philo Irudhayanath books.

tshrinivasan commented 5 years ago

https://www.facebook.com/researcher.philo

many details are available here about the author

gnuanwar commented 5 years ago

1 | 1961, ஆதிவாசிகள், கலைமகள் காரியாலயம், சென்னை. 2 | 1979, மேற்கு மலைவாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை 3 | 1967, காட்டில் என் பிரயாணம், இளங்கோ பதிப்பகம், சென்னை 4 | 1967, அறிவியல் பூங்கா, இளங்கோ பதிப்பகம், சென்னை 5 | 1984, காட்டில் மலர்ந்த கதைகள், வானதி பதிப்பகம், சென்னை 6 | 1984, காட்டில் கண்ட மர்மம், வானதி பதிப்பகம், சென்னை 7 | 1985, யார் இந்த நாடோடிகள், வானதி பதிப்பகம், சென்னை 8 | 1978, பழங்குடிகள், தமிழ் செல்வி நிலையம், சென்னை 9 | 1977, ஆதிவாசிகள் மறைந்த வரலாறு, தமிழ் செல்வி நிலையம், சென்னை 10 | 1967, இமயமலை வாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை 11 | 1989, கேரளா ஆதிவாசிகள், வானதி பதிப்பகம், சென்னை 12 | 1991, நீலகிரி படுகர்கள், வானதி பதிப்பகம், சென்னை 13 | கொங்கு மலைவாசிகள், தென்றல் நிலையம், சிதம்பரம் 14 | கோயிலும் குடிகளும், தென்றல் நிலையம், சிதம்பரம் 15 | தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, தென்றல் நிலையம், சிதம்பரம் 16 | குறிஞ்சியும் நெய்தலும், தென்றல் நிலையம், சிதம்பரம் 17 | கோயிலைச் சார்ந்த குடிகள், தென்றல் நிலையம், சிதம்பரம்

gnuanwar commented 5 years ago

1989, கேரளா ஆதிவாசிகள், வானதி பதிப்பகம், சென்னை

1977, ஆதிவாசிகள் மறைந்த வரலாறு, தமிழ் செல்வி நிலையம், சென்னை 1985, யார் இந்த நாடோடிகள், வானதி பதிப்பகம், சென்னை

மேற்கண்ட புத்தகங்கள் இந்த இணையதளத்தில் பதிவிரக்கம் செய்யலாம்

gnuanwar commented 5 years ago

@tshrinivasan தமிழ் இணைய கல்வி கழகத்தில் இவரின் மற்ற தலைப்புகளின் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டு பெறலாம் http://tamildigitallibrary.in/

gnuanwar commented 5 years ago
  1. யூதர்கள் ஆதிவாசியானது எப்படி-25
  2. கோயிலை சார்ந்த குடிகள்- 60
  3. நிலகிரி படகர்கள்-17
  4. பிராயணம் ஒரு கலை,ஏமாந்தால்?- 18
  5. கேரள ஆதிவாசிகள் -8
  6. யார் இந்த நாடோடிகள்-8
  7. காட்டில் மலர்ந்த கதைள் -15
  8. காட்டில் கண்ட மர்மம்- 12
  9. இமயமலைவாசிகள்-30
  10. ஆதிவாசிகள்-100
  11. குறிஞ்சியும் நெய்தலும்-30
  12. கோயிலும் குடிகளும்-50

மேற்கண்ட புத்தகங்கள் http://marinabooks.com/category?authorid=7289&page=2&showby=list&sortby= இந்த புத்தக்டையில் கிடைக்கிகிறது

gnuanwar commented 5 years ago

13/05/19 தொடர்ச்சியாக பிலோ இருதயநாத் புத்தகம் மற்றும் ஆவணங்களை தேடும் முயற்ச்சியில் இருந்த போது திரு திரு.தர்மலிங்கம் வேணுகோபால் அவர்களின் தொடர்பு கிடைத்தது அவருக்கு கணியம் அறக்ட்டளை பற்றிய வரிவான மின் அஞ்சல் அனுப்ப்பட்டது

14/05/19 அன்று நம்முடைய நேற்று அனுப்பிய மின் அஞ்சலுக்கு பதில் கிடைத்ததுபிலோ இருதயநாத் அவர்களின் புத்தகங்கள்,புகைபடங்கள்,ஆவணங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை திரு.தர்மலிங்கம் வேனுகோபால் அவர்களிடம் இருப்பதாகவும் நமது ஆவணபடுத்தல் முயிற்ச்சிக்கு தன்னால் முடிந்தவற்றை தர இசைவு தந்துள்ளார் மேலும் அவர் தன் சொந்த முயற்ச்சியில் நீலகிரி பற்றிய ஆவணகாப்பகத்தை நடத்துகிறார் இணப்பு http://www.nilgiridocumentation.com/contact-us.html

gnuanwar commented 5 years ago

18.05.19 அன்று இரவு பிலோவின் உறவினர் திரு மனோஜ் அவர்கள் அமேரிக்காகாவில் இருந்து தொலைபேசினார் பிலொவின் புத்தகங்களை மின் நூலாக்கம் செய்வ்து குறித்து விரிவான மற்றும் ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் கணியம்,பிரிதமிழ் இபுக்ஸ் செய்ல்பாடுகள் குறித்து கருத்துகள் பரிமாறப்ட்டது அத்தக்ட்ட நகர்வுக்கான முடிவுகள் எடுக்கபட்டது. அதனை தொடர்ந்து மனோஜின் தந்தையை இன்று சந்துத்து பிலொவை பற்றிய தகவல் மற்றும் அவரின் மற்ற புத்தகங்களை அவரிடம் இருந்து பெருவதாக திட்டம் philo

gnuanwar commented 5 years ago

இன்று பிலோ இருதயநாத்தின் உறவினர் (மருமகன்) அமல் ராஜ் அவர்களை இரவு 8மணி அளவில் அவரது வீட்டில் சந்தித்திதேன்.பிலோவை பற்றியதகவல்களை கேட்டறிந்தேன் மேலும் அவரது மகன் திரு மனோஜ் அவர்கள் திரட்டிய அவரது புத்தகங்கள்

  1. காட்டில் மலர்ந்த கதைகள்
  2. ஆதிவாசிகள்
  3. கொங்கு மலைவாசிகள்
  4. காட்டில் கண்ட மர்மம்
  5. பயணம் ஒருகலை ஆனால்?

ஆகிய அச்சு புத்தக்ங்களை மின் நூலாக்கம் செய்வதற்க்கு தந்தார் இந்த நூல்களின் காப்புரிமை அறிவிப்பை விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்

photo_2019-05-20_22-07-28

gnuanwar commented 5 years ago

நேற்று 15/06/19 அன்று காலை 10 மணி அளவில் பிலோ இருதயநாத்தின் நண்பர் திரு.தர்மலிங்கம் வேணுகோபால் அவர்கள் நீலகிரியிலிருந்து சென்னை வந்தவர் சந்திக்க அழைத்தர் பிலோ பற்றிய 2020 நாள்காட்டியை கொண்டுவருவதாக சொன்னார் மேலும் தன்னிடம் இருக்கும் அவரின் புத்தகம் மற்றும் இன்ன பிற பிலோவின் சேகரிப்புகளை ஆவணபடுத்த தருவதாக உறுதி அளித்தார் விரைவில் அவரது சேகரிப்புகளை நேரில் காண வேண்டும் photo_2019-06-16_13-19-50

gnuanwar commented 5 years ago
1. யூதர்கள் ஆதிவாசியானது எப்படி-25

2. கோயிலை சார்ந்த குடிகள்- 60

3. நிலகிரி படகர்கள்-17

4. பிராயணம் ஒரு கலை,ஏமாந்தால்?- 18

5. கேரள ஆதிவாசிகள் -8

6. யார் இந்த நாடோடிகள்-8

7. காட்டில் மலர்ந்த கதைள் -15

8. காட்டில் கண்ட மர்மம்- 12

9. இமயமலைவாசிகள்-30

10. ஆதிவாசிகள்-100

11. குறிஞ்சியும் நெய்தலும்-30

12. கோயிலும் குடிகளும்-50

மேற்கண்ட புத்தகங்கள் http://marinabooks.com/category?authorid=7289&page=2&showby=list&sortby= இந்த புத்தக்டையில் கிடைக்கிகிறது

மெரினவில் விசரித்த்தில் இப்போது எந்த புத்தகமும் அச்சில் இல்லை

gnuanwar commented 5 years ago

NEELAGIRI PADAGARKAL is avilable in Coimbatore District Central Library

gnuanwar commented 5 years ago

பிலோவின் கட்டுரை பற்றி ரு வலைபதிவர் இட்ட கட்டுரை அதில் பிலோவின் நூல்கள் கிடைக்கக்கவில்லை என்ற ஏக்கம் http://engalblog.blogspot.com/2015/10/blog-post_28.html

gnuanwar commented 5 years ago

பிலோ பற்றி http://tthamizhelango.blogspot.com/2015/08/blog-post_15.html

gnuanwar commented 5 years ago

காட்டில் என் பிராயணம் பற்றி https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-80-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6484417.ece

gnuanwar commented 5 years ago

பயணம் ஒரு கலை.... ஏமாந்தால்? - பிலோ இருதயநாத்- புத்தக அறிமுகம்

gnuanwar commented 5 years ago

ஜனவரி 1955 மஞ்சரி இதழில் பிலோ இருதயநாத் எழுதிய ‘எங்கும் திரியும் குறவர் ‘ குருவிக்காரர்களான நரிக்குறவர்கள் பற்றியது. அதிலிருந்து –

எந்தச் சிறப்பும் செய்யப்படாமல் இறந்துபோன தமிழ்க் கவிஞர்கள், கதாசிரியர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் பட்டியல் நீண்டது. இதில் பிலோ இருதயநாத் பெயர் கட்டாயம் இடம் பெறும்.

பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்த இருதயநாத் வார விடுமுறையையையும், கால், அரை, முழுப் பரீட்சை லீவையும் எதிர்பார்த்திருந்தது டியூஷன் எடுத்து நாலு காசு பார்க்க இல்லை. காட்டைப் பார்க்க ஓட. ஹெர்குலீஸ் சைக்கிளை எனக்குத் தெரிந்து தூங்க உபயோகித்தவர் அவர்தான். காடு மேடெல்லாம் அந்த சைக்கிளில் பயணப்பட்டு, இருளரையும், பளிங்கரையும், தொதவரையும், குடவரையும் எல்லாம் தன் எழுத்து மூலமும், பழைய காமிரா வழியாகவும் தமிழ்நாட்டு சிரத்தையில் பதித்தவர் அவர்.

ஜனவரி 1955 மஞ்சரி இதழில் பிலோ இருதயநாத் எழுதிய ‘எங்கும் திரியும் குறவர் ‘ குருவிக்காரர்களான நரிக்குறவர்கள் பற்றியது. அதிலிருந்து –


ஒரு சமயம் குறவன் ஒருவன் கோணி ஊசிக்குத் துவாரம் அடித்துக் கொண்டிருந்தான். நான் அந்தச் சுத்தியையும் ஆணியையும் குடைக்கம்பியையும் வாங்கி, ‘நான் துவாரம் அடிக்கிறேன் ‘ என்று கூறி எல்லாவற்றையும் சரியாக வைத்து, சுத்தியை இறங்கி அடிப்பதற்காகப் பாதி தூரம் தான் இறங்கினேன். அதற்குள்ளேயே, ‘போச்சு ‘ என்று அவன் கூறினான். நான் அப்படியே நிறுத்திக்கொண்டு, ‘ அடிப்பதற்குள் ஊசியில் துவாரம் விழாது என்று உனக்கு எப்படித் தெரியும் ? ‘ என்றேன். ‘உங்கள் சுத்தியும் கையும் வரும் வேகத்தைப் பார்த்தாலே துவாரம் விழாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது ‘ என்று இரண்டு மூன்று குறவர்கள் சேர்ந்து சொன்னார்கள்….

பல தெய்வங்களை இவர்கள் வழிபடுகிறார்கள். மதுரை மீனாட்சி, பரவட்டைக் காளி, ஆட்டுக்கிடாச் சாமி, எருமைக்கடாக் காளி, காட்டேரி, முனி முத்தாயி, கறுப்பாயி ஆகியோர் முக்கியமான தெய்வங்கள். பெண் தெய்வத்துக்குத்தான் இவர்கள் அதிக மதிப்புக் கொடுக்கிறார்கள்…

திருவிழா நடத்துவதற்குச் சித்திரை மாதத்தில் பிறைக்குப்பின் ஒரு நாளைக் குறிப்பார்கள். அதிக ஜன நடமாட்டம் இல்லாத தோப்புகளில் ஏழு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இவர்கள் பொங்கலிடும் காட்சியைக் கட்டாயம் காணவேண்டும். தீ மூட்டி வெவ்வேறு பானைகளில் தனித்தனியே அரிசியும் மற்றப் பொருள்களும் இடுவார்கள். மேலே இருக்கும் பானைதான் முதன்முதலில் பொங்கி வழிய ஆரம்பிக்கும். அதை அகப்பையாலோ கரண்டியாலோ கிளறிக் கொடுத்தால் தேவதைக்குக் கோபம் உண்டாகுமாம். ஆகவே தெய்வ ஆவேசம் வந்த ஒருவன் தன் கையையே பொங்கும் பானைக்குள் அகப்பை போல் இட்டுக் கிளறிக் கொடுக்கிறான். இந்தக் காட்சியைக் காணும்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது….

பல நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் பல இடங்களுக்கும் நடந்தே குறுக்கு வழியில் போனதால், இவர்களிடம் அந்த அந்த நாட்டு மன்னர்கள் மற்ற மன்னர்களைப் பற்றிய தகவல்களும், காட்டு வழிகளும், குறுக்கு வழிகளும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். சேனை பலம் பற்றியும் இவர்கள் கூறியதால் சில மன்னர்கள் இவர்களை வேவுகாரர்களாகவும், தங்கள் சேனைக்கு வழிகாட்டிகளாகவும் அமர்த்திக் கொண்டார்கள். இந்தக் காரணத்தைக் கொண்டே இவர்களுக்குத் தெலுங்கு நாட்டில் ‘எருக்கலா ‘ என்ற பெயர் வந்தது. எருக்கலா என்பதற்கு அறிவு என்பது ஒரு பொருள். பழங்காலத்தில் குறவர்களைத் தமிழர் ‘கூறுவான் ‘ என்று வழங்கி இருக்கலாம். அது திரிந்து, குறவன் என்று ஆகியிருக்கலாம்.


இது புதிய செய்தியாகும். நான் ரகர றகர வேறுபாடு இல்லாமல், குரவர், குறவர் இரண்டுமே தலைவர் என்ற பொருள் தரும் என்று நினைத்திருந்தேன்.

gnuanwar commented 5 years ago

பிலோவின் தமிழ் ஊர்களின் சிறப்பு சிங்ப்பூர் நூலகத்தில்](http://www.nlb.gov.sg/biblio/12134726)

image

gnuanwar commented 5 years ago

following books are available in tn Secretariat library http://library.tn.gov.in/all-author.asp?subcode1=300&subcode2=309&subject=Social%20Sciences&lgcd=2&isscd=0&age=60000

image

gnuanwar commented 5 years ago

https://www.google.co.in/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%22

image

gnuanwar commented 5 years ago

மேற்கு மலை வாசிகள்

http://opac.nationallibrary.gov.in/cgi-bin/gw/chameleon?sessionid=2016093003104910324&skin=nl&lng=en&inst=consortium&host=localhost%2B1111%2BDEFAULT&patronhost=localhost%201111%20DEFAULT&search=SCAN&sourcescreen=INITREQ&rootsearch=3&elementcount=1&u1=4&t1=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%2F%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&function=NEXTPAGE&pos=-30&pagingt=%013875774&beginsrch=&usersrch=

image

gnuanwar commented 5 years ago

பிலோவை பற்றி

எந்தச் சிறப்பும் செய்யப்படாமல் இறந்துபோன தமிழ்க் கவிஞர்கள், கதாசிரியர்கள், கட்டுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் பட்டியல் நீண்டது. இதில் பிலோ இருதயநாத் பெயர் கட்டாயம் இடம் பெறும்.

பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்த இருதயநாத் வார விடுமுறையையையும், கால், அரை, முழுப் பரீட்சை லீவையும் எதிர்பார்த்திருந்தது டியூஷன் எடுத்து நாலு காசு பார்க்க இல்லை. காட்டைப் பார்க்க ஓட. ஹெர்குலீஸ் சைக்கிளை எனக்குத் தெரிந்து தூங்க உபயோகித்தவர் அவர்தான். காடு மேடெல்லாம் அந்த சைக்கிளில் பயணப்பட்டு, இருளரையும், பளிங்கரையும், தொதவரையும், குடவரையும் எல்லாம் தன் எழுத்து மூலமும், பழைய காமிரா வழியாகவும் தமிழ்நாட்டு சிரத்தையில் பதித்தவர் அவர்.

ஜனவரி 1955 மஞ்சரி இதழில் பிலோ இருதயநாத் எழுதிய ‘எங்கும் திரியும் குறவர் ‘ குருவிக்காரர்களான நரிக்குறவர்கள் பற்றியது. அதிலிருந்து –


ஒரு சமயம் குறவன் ஒருவன் கோணி ஊசிக்குத் துவாரம் அடித்துக் கொண்டிருந்தான். நான் அந்தச் சுத்தியையும் ஆணியையும் குடைக்கம்பியையும் வாங்கி, ‘நான் துவாரம் அடிக்கிறேன் ‘ என்று கூறி எல்லாவற்றையும் சரியாக வைத்து, சுத்தியை இறங்கி அடிப்பதற்காகப் பாதி தூரம் தான் இறங்கினேன். அதற்குள்ளேயே, ‘போச்சு ‘ என்று அவன் கூறினான். நான் அப்படியே நிறுத்திக்கொண்டு, ‘ அடிப்பதற்குள் ஊசியில் துவாரம் விழாது என்று உனக்கு எப்படித் தெரியும் ? ‘ என்றேன். ‘உங்கள் சுத்தியும் கையும் வரும் வேகத்தைப் பார்த்தாலே துவாரம் விழாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது ‘ என்று இரண்டு மூன்று குறவர்கள் சேர்ந்து சொன்னார்கள்….

பல தெய்வங்களை இவர்கள் வழிபடுகிறார்கள். மதுரை மீனாட்சி, பரவட்டைக் காளி, ஆட்டுக்கிடாச் சாமி, எருமைக்கடாக் காளி, காட்டேரி, முனி முத்தாயி, கறுப்பாயி ஆகியோர் முக்கியமான தெய்வங்கள். பெண் தெய்வத்துக்குத்தான் இவர்கள் அதிக மதிப்புக் கொடுக்கிறார்கள்…

திருவிழா நடத்துவதற்குச் சித்திரை மாதத்தில் பிறைக்குப்பின் ஒரு நாளைக் குறிப்பார்கள். அதிக ஜன நடமாட்டம் இல்லாத தோப்புகளில் ஏழு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இவர்கள் பொங்கலிடும் காட்சியைக் கட்டாயம் காணவேண்டும். தீ மூட்டி வெவ்வேறு பானைகளில் தனித்தனியே அரிசியும் மற்றப் பொருள்களும் இடுவார்கள். மேலே இருக்கும் பானைதான் முதன்முதலில் பொங்கி வழிய ஆரம்பிக்கும். அதை அகப்பையாலோ கரண்டியாலோ கிளறிக் கொடுத்தால் தேவதைக்குக் கோபம் உண்டாகுமாம். ஆகவே தெய்வ ஆவேசம் வந்த ஒருவன் தன் கையையே பொங்கும் பானைக்குள் அகப்பை போல் இட்டுக் கிளறிக் கொடுக்கிறான். இந்தக் காட்சியைக் காணும்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது….

பல நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் பல இடங்களுக்கும் நடந்தே குறுக்கு வழியில் போனதால், இவர்களிடம் அந்த அந்த நாட்டு மன்னர்கள் மற்ற மன்னர்களைப் பற்றிய தகவல்களும், காட்டு வழிகளும், குறுக்கு வழிகளும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். சேனை பலம் பற்றியும் இவர்கள் கூறியதால் சில மன்னர்கள் இவர்களை வேவுகாரர்களாகவும், தங்கள் சேனைக்கு வழிகாட்டிகளாகவும் அமர்த்திக் கொண்டார்கள். இந்தக் காரணத்தைக் கொண்டே இவர்களுக்குத் தெலுங்கு நாட்டில் ‘எருக்கலா ‘ என்ற பெயர் வந்தது. எருக்கலா என்பதற்கு அறிவு என்பது ஒரு பொருள். பழங்காலத்தில் குறவர்களைத் தமிழர் ‘கூறுவான் ‘ என்று வழங்கி இருக்கலாம். அது திரிந்து, குறவன் என்று ஆகியிருக்கலாம்.

இது புதிய செய்தியாகும். நான் ரகர றகர வேறுபாடு இல்லாமல், குரவர், குறவர் இரண்டுமே தலைவர் என்ற பொருள் தரும் என்று நினைத்திருந்தேன்.

http://old.thinnai.com/?p=60501204

gnuanwar commented 5 years ago

பிலோ பற்றி மேற்க்கோள் இங்கு http://www.keetru.com/literature/review/koothaavari.php

gnuanwar commented 5 years ago

National Folklore Support Centre https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=40&cad=rja&uact=8&ved=2ahUKEwiXhpuC9fXiAhWKtY8KHd62Ack4HhAWMAl6BAgIEAI&url=http%3A%2F%2Findianfolklore.org%2Fjournals%2Findex.php%2FIFL%2Farticle%2Fdownload%2F626%2F771&usg=AOvVaw3p_8D8V7BqpqACQLHUD6fn

gnuanwar commented 5 years ago

பிலோவை பற்றிய கட்டுரை

http://madrasmusings.com/Vol%2021%20No%207/biking-in-search-of-the-tribals.html

gnuanwar commented 5 years ago

பிலோவின் இன்னோரு புத்தகம்

image

கட்டுரை பற்றிய சான்று image

இணப்பு https://thanithamizhakarathikalanjiyam.github.io/kanmani_tamil_9

gnuanwar commented 5 years ago

மக்கள் வணங்கும் ஆலயம் புத்தக சான்று

image

இணைப்பு http://tirunelveli.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=854079

gnuanwar commented 5 years ago

பயண கட்டுரை image இணைப்பு http://annejac.com/wp-content/uploads/ug-tamil-syll.pdf

gnuanwar commented 5 years ago

பிலோவின் கிடைக்காத புத்தகங்கள்

image image image image

இணைப்பு http://salem.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=ccl=au:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&limit=branch:SLM

@tha-uzhavan இந்த புத்தகங்கள் சேலம் நூலகத்தில் இருக்கின்றதா பாரத்து சொல்லவும்

gnuanwar commented 5 years ago

பிலோ இருதயநாத்: கானுயிர் பயணங்களின் முன்னோடியா? அல்லது மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியா?

பிலோ இருதயநாத்என் மாணவப்பருவத்தில் எங்கள் வீட்டில் அப்பா வாங்கிக்குவித்திருந்த சஞ்சிகைகளில் மஞ்சரியும் ஒன்று. மஞ்சரியில்தான் முதன் முதலில் பிலோ இருதயநாத் அவர்களின் ஆதிவாசிகள் பற்றிய பயணக்கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். தனியொருவனாக அவர் இந்தியாவின் பல்வேறு பாகங்களூக்கும் பயணித்து, அங்கு வாழும் ஆதிக்குடிகள், காட்டுவாசிகள் எனப்பல பயணக்கட்டுரைகளைச்சுவைப்பட எழுதியிருக்கின்றார்.

இவர் பற்றிய பல விடயங்களை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைப்பதிவில் எழுதிய 'பிலோ இருதயநாத்' என்னும் கட்டுரையில் காணலாம். 1915இல் மைசூரில் பிறந்த இவர் சென்னை மந்தைவெளியிலுள்ள லாசர் கோவில் தெருவில் வசித்தாரென்றும், பள்ளி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவரென்றும் பல விடயங்களை ராமகிருஷ்ணனின் கட்டுரை எடுத்துரைக்கின்றது.

தமிழ்வாணனைப்போல், எம்ஜிஆரைப்பபோல் இவரும் ஆடை , அலங்காரங்களைப்பொறுத்தவரையில் தனித்துவம் பேணியவர். தொப்பி, கறுப்புக்கண்ணாடி அணிந்த தோற்றம், கூடவே பயணிக்க சைக்கிளொன்று... இவ்விதமானதோற்றத்தில்தான் அவரை அவர் பயணிக்கும் சமயங்களில் காண முடியும்.

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் இவரது பங்களிப்பு பற்றிக்குறிப்பிடுகையில் 'மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி'யாகவும், 'கானுயிர் பயணங்களின் முன்னோடியாகவும் குறிப்பிடுவார்.

நீலகிரிப்படகர்கள், ஊட்டி தோடர்கள், காடர்கள் எனப்பல்வேறு ஆதிக்குடிகள் பற்றி நான் முதலில் அறிந்துகொண்டது இவரது கட்டுரைகளின் மூலமாகத்தான். இவர் தனது பயணங்களின்போது சந்திக்கும் ஆதிவாசிகளுடன் தங்கியிருந்து, அவர்களது மொழிகளையும் கற்பதில் ஆர்வம் மிக்கவராகவிருந்திருக்கின்றார். அத்துடன் அவர்களது பழக்க வழக்கங்களையெல்லாம் அறிந்து அவற்றைசு சுவையாக , யாரும் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரைகளாக எழுதியிருக்கின்றார்.

இவரது பேரன் எனத்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மனோஜ்குமார் தனது வலைப்பதிவில் இவரை Dr.பிலோ இருதயநாத் என்று குறிப்பிடுவார். அதே சமயம் அவரைத் தனது தாத்தாவென்றும் அறிமுகப்படுத்துவார். மேலும் தனது பதிவில் பிலோ இருதயநாத் அவர்கள் 3000 கட்டுரைகள் வரை எழுதியிருப்பதாகவும் அவை 70 இதழ்களில் வெளிவந்திருப்பதாகவும், எழுதிய 63 நூல்களில் 37 மட்டுமே வெளியாகியிருப்பதாகவும் குறிப்பிடுவார். அத்துடன் இந்திய மத்திய அரசின் மற்றும் தமிழக அரசின் விருதுகளைப்பெற்றவரென்றும் குறிப்பிடுவார். இவரை 'Dr.பிலோ இருதயநாத்' என்று அவர் குறிப்பிடுவதிலிருக்கும் Dr எதைக்குறிக்கின்றது என்பது தெரியவில்லை. இவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியயென்பதால் மருத்துவரல்லர். ஏதாவது பல்கலைக்கழகம் இவரது சேவையினைப் பாராட்டிக்கொடுத்த கெளரவக் கலாநிதி பட்டமோ தெரியவில்லை. ஆனால் அவ்விதமானதொரு பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர்தான் பிலோ இருதயநாத் அவர்கள்.

அவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடமையாக்க வேண்டும். அதன் மூலம் அப்படைப்புகள் அனைத்தும் நூலுருப்பெறும் வாய்ப்பு கிட்டும்.

சைக்கிளில் எப்பொழுதுமே பயணிக்கும் இவர் அவ்வப்போது மரத்துடன் சைக்கிள் 'கேரியரை' சாய்த்து வைத்து, அதனையும் , மரத்தையும் பலகையினையுமிணைத்து தூங்குவாராம்.

எனக்கு அவரது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். அவர் ஞாபகமாக அவரை வெளிப்படுத்தும் புகைப்படங்கள், வானதி பதிப்பகம் மூலம் வெளியான நூல்கள் சிலவற்றின் அட்டைப்படங்களை உள்ளடக்கிய புகைப்படம் ஆகியவற்றை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2864:-112-a-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

gnuanwar commented 5 years ago

உடும்புச் சவாரி : பிலோ இருதயநாத்

 

https://www.vikatan.com/anandavikatan/2010-may-19/vikatan-pokkisham/38104.html

gnuanwar commented 5 years ago

யூதர்கள் ஆதிவாசியானது எப்படி

மேற்க்காணும் தலைப்பு புத்தகத்தை மின் நூலக்காத்திறக்கு மய்ப்பு பாரக்க சேர்க்கபட்டது

image

https://github.com/KaniyamFoundation/Proofread-Works/issues/22#issue-459188446

gnuanwar commented 5 years ago

கிழ்கண்ட புத்தகங்கள் தேவைபடுகிறது

  1. காட்டில் என் பிரயாணம், இளங்கோ பதிப்பகம், சென்னை
    1. அறிவியல் பூங்கா, இளங்கோ பதிப்பகம், சென்னை
    2. பழங்குடிகள், தமிழ் செல்வி நிலையம், சென்னை
    3. இமயமலை வாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை
    4. நீலகிரி படுகர்கள், வானதி பதிப்பகம், சென்னை
    5. கோயிலும் குடிகளும், தென்றல் நிலையம், சிதம்பரம்
    6. தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, தென்றல் நிலையம், சிதம்பரம்
    7. குறிஞ்சியும் நெய்தலும், தென்றல் நிலையம், சிதம்பரம் கோயிலைச் சார்ந்த குடிகள், தென்றல் நிலையம், சிதம்பரம்
    8. மக்கள் வணங்கும் ஆலயம் 
    9. கண்டேன் கொள்ளிவாய் பிசாசை 11.காடு கொடுத்த ஏடு
gnuanwar commented 5 years ago

பிலோவின் புத்தகங்கள்

1.1961, ஆதிவாசிகள், கலைமகள் காரியாலயம், சென்னை. hard copy

  1. 1979, மேற்கு மலைவாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை
  2. 1967, காட்டில் என் பிரயாணம், இளங்கோ பதிப்பகம், சென்னை
  3. 1967, அறிவியல் பூங்கா, இளங்கோ பதிப்பகம், சென்னை
  4. 1984, காட்டில் மலர்ந்த கதைகள், வானதி பதிப்பகம், சென்னை 6. 1984, காட்டில் கண்ட மர்மம், வானதி பதிப்பகம், சென்னை 7. 1985, யார் இந்த நாடோடிகள், வானதி பதிப்பகம், சென்னை
  5. 1978, பழங்குடிகள், தமிழ் செல்வி நிலையம், சென்னை 9. 1977, ஆதிவாசிகள் மறைந்த வரலாறு, தமிழ் செல்வி நிலையம், சென்னை tuv
  6. 1967, இமயமலை வாசிகள், மல்லிகை பதிப்பகம், சென்னை 11. 1989, கேரளா ஆதிவாசிகள், வானதி பதிப்பகம், சென்னை tuv & hard copy
  7. 1991, நீலகிரி படுகர்கள், வானதி பதிப்பகம், சென்னை 13. கொங்கு மலைவாசிகள், தென்றல் நிலையம், சிதம்பரம் hard copy
  8. கோயிலும் குடிகளும், தென்றல் நிலையம், சிதம்பரம்
  9. தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, தென்றல் நிலையம், சிதம்பரம்
  10. குறிஞ்சியும் நெய்தலும், தென்றல் நிலையம், சிதம்பரம்
  11. கோயிலைச் சார்ந்த குடிகள், தென்றல் நிலையம், சிதம்பரம் 18. யூதர்கள் ஆதிவாசியானது எப்படி hard copy
  12. நீலகிரி படகர்கள் 20. பயணம் ஒரு கலை,ஏமாந்தால்? hard copy 21. காட்டில் கண்ட மர்மம்hard copy
  13. குறிஞ்சியும் நெய்தலும்
  14. கோயிலும் குடிகளும்
  15. தமிழ் மலையாளிகள்
  16. மக்கள் வணங்கும் ஆலயம்
  17. தமிழில் அச்சான முதல் நூல்
  18. காடு கொடுத்த ஏடு 28.எங்கே நிம்மதி எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம்? hard copy

highlighted books are avialble with us no 28 book is avialble with nelagiri venugopal

gnuanwar commented 5 years ago

தவறுகளில் இருந்து பாடம் கற்போம்

நேற்று 17/07/19 அன்று பிலோவின் இளைய சகோதரர் மகன் திரு மனோ அவர்களிடம் creative commons அனுமதி (ஆங்கிலம்,தமிழில் தட்டச்சு செய்த) கடிதத்தை கையோப்பம் வாங்க மாலை 7மணி அளவி்ல் சென்றேன் மனோ அவர்களின் துணைவியார் ஐரின் அந்த கடிதத்தை படித்துவிட்டு அதில் commercial என்று குறிப்பிடள்ளது அதனால் இதனை நாங்கள் கையேழுத்து போட மாட்டோம் என்று இதில் இந்த வார்த்தை யை எடுத்தால் கையேழுத்து போடலாம் என்று சொன்னார் ஆனால் பிலோவின் மற்ற வாரிசுகள் கையேழுத்து இட எங்களுக்கு ஆட்ச்சேபனை இல்லை என்று கூறினார் commercial பற்றி மற்றும் cc பற்றிய விளக்கம் கொடுக்கபட்டும் அவர்கள் நமது விளக்கத்தை ஏற்க்கவில்லை இந்த கடிதம் creative commons

அதன் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கபட்டது என்ற விளக்கத்தை கொடுத்தும் அவர்கள் ஏற்க்கவில்லை

மேலும் 09/07/19 அன்று மனோ மற்றும் அவரின் துணைவியாரிடம் அனுமதி கடிதத்தின் மாதிரியை காட்டி அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்துவிட்டுதான் நாம் அனுமித கடிதத்தை கையேழுத்து வாங்க சென்றோம் இதனை பற்றி வினா எழுப்பினால் அன்று நான் படிக்கவில்லை என்று சொல்கிறார்

CC-BY-SA உரிமையில் வெளியிட்டால் மட்டுமே அச்சு நூல்களை Scan/OCR/Proofread/CoverImage/Ebook making செய்து இலவச மின்னூலாக வெளியிட முடிவெடுத்துள்ளோம்.

பிலோ நூல்களை CC-BY-SA உரிமையில் பெறுவது எப்படி என்று ஆய்ந்து வருகிறோம்.

படைப்பாக்க பொதுமங்கள் உரிமை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
https://bit.ly/2Yat9yx

https://bit.ly/1upaQv7