KaniyamFoundation / CreativeCommonsAnnouncements

A project to work on announcing digital contents on Creative Commons License
0 stars 0 forks source link

பழங்காசு சீனிவாசன்-சந்திப்பு #19

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

இன்று திரு பழங்காசு சீனிவாசனை சென்னை அடுத்துள்ள கோவில் பதாகையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரது இல்லத்தின் அருகில் அவரது புத்தகங்களுக்கு தனியாக ஒரு வீட்டை தனியாக நீண்ட நாள் ஒப்பந்தத்தில் 35-ஆயிரத்துகும் மேற்ப்பட்ட புத்தகங்களை தன்னுடைய சேகரிப்பில் வைத்துள்ளார்.

இவரது இந்த சேகரிப்பை சமீபத்தில் திருச்சியில் இருந்து செனட்னைக்கு எடுத்து வந்துள்ளார் இன்னும் அடுக்காமல் நூல்கள் பெட்டிகளில் இருக்கிறது.

இந்த புத்தகங்களை கணியம் சார்பாக ஒளி வருடல் செய்து இணையத்தில் ஆவணபடுத்த உதவி செய்ய நினைக்கிறோம் என்பதை சொன்னோம் நூலகத்தை தொடர்ந்து பரமறிக்க முடியாதால் நூலகத்தை விற்ப்பனை செய்ய நினைக்கிறர் அதறக்கான பேச்சுவார்த்தையில் உள்ளார் என்ற தகவலை நமக்கு சொன்னார் இவரது சேகரிப்பில் உள்ள புத்தகங்கள் அனத்தும் இவர் படப்தறக்கு வாங்கி பின்னர் அவை அவரது சேகரிப்பில் வந்தவைவ என்று கூறினார் மேலும் 12நூல்களை எழுதி உள்ளார் அவை யாவும் நான் மக்களுக்காக எழுதியவை அவற்றை மின்நூலாக்கம் செய்ய இசைவு தந்துள்ளார்.

புத்தகங்களை தவிர ஒரு தமிழ் கல்வெட்டு மரத்தால் ஆன அரியவகை வேலைபாட்டில் உள்ள பல்லாங்குழி,பழைய காசுகள் அவற்றையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளார்.

அவரது குடும்பம் படத்தலைவராக ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து சேர்ந்தவர்கள் சிறு வயதிலேயே கம்யூனிஸ்ட் தன்னை இணைத்து பணியாற்றி இருக்கிறார் அங்கு தான் புத்தகம் படிக்கும் பழக்கம் தொடங்கியது என்றும் இரவல் வாங்கிய புத்தகங்களை நீண்ட நாள்ள வைத்து படிக்க முடியவில்லை என்று சொந்தமாக புத்தகங்களை வாங்கும் பழக்கம் தடங்கியது என்று சொன்னார்

தன் அம்மா படித்த 5ம் வகுப்பு புத்தகம்,திரு வள்ளுவரின் 40க்கும் மேறப்பட்ட புகைபடங்கள்என்று அரியவகை புகைபடங்களும் இன்னமும் அரிய வகை புத்தகங்களை தன் சேகரிப்பில் புதிதாக சேர்க்கிறார் என்ற தகவலையும் ஒளி வருடல் செய்து புத்தகங்களை ஆவணபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் இணையத்தில் ஆவணபடுத்தும் போது அவற்றின் விற்பனை பாதிக்கும் என்று தன் எண்த்தை வெளிபடுத்தினார்