KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

பாட புத்தகங்களை மின்நூல்களாக மாற்றுதல் கிகா உரிமையில் பகிர்தல் #145

Open gnuanwar opened 3 years ago

gnuanwar commented 3 years ago

விக்கிபிடியர் ஶ்ரீதர் அவர்களிளிடம் தமிழ் வழி பாட நூல்களை மின் நூல் வடிவமாக்குவதால் படிக்கும் மாணவர்களுக்கும் குடிமை தேர்வுக்கு தயார்படுத்தும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் இந்த நூல்கள் யாவும் கி.கா உரிமையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளதால் இந்த மின்நூல்களின் பயன்பாடு இன்னும் விரியும்

தமிழக அரசின் கி.கா உரிமை https://wiki.creativecommons.org/wiki/India:_Tamil_Nadu:_Information_Department_of_Government_of_Tamil_Nadu

Sriteacher commented 3 years ago

வணக்கம், அன்வர் அவர்களுக்கு நன்றி. தமிழ்வழிப் பாடநூல்களை விக்கிமூலத்தில் இருப்பது போல் மின்நூல் வடிவமாக்கினால் தேர்வு நோக்கில் பல கற்றல் கற்பித்தல் செயல்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். ஆங்கில வழிப் பாட நூல்களை மின்நூல்களில் இருந்து copy & paste செய்வது எளிதாக உள்ளது. ஆனால் தமிழ் வழிப் பாடநூல்களுக்கு பல சிக்கல்கள் எழுகின்றன. யுனிகோட் font இல் தமிழ்வழிப் பாடநூல்கள் இருந்தாலும் அதனை copy & paste செய்கையில் எழுத்துகள் கட்டங்களாக வருகிறது. இதனை நுட்ப ரீதியில் விளக்க எனக்குத் தெரியவில்லை. எனவே, பாடநூல்களை மின்நூல்களாக மாற்றித்தர முடிந்தால் பின்வரும் செயல்களுக்கு உதவியானதாக இருக்கும்.

  1. பள்ளி மாணவர்களுக்கு 8,9,10 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையே NMMS,TRUST,NTSE போன்ற தேர்வுகளின் மூலம் ஆண்டிற்கு 12,000 ( NMMS) மற்றும் 15,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குப் பெற முடியும். எங்கள் பள்ளி மாணவர்கள் இருவர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று உதவித் தொகைப் பெற்றுள்ளனர். இதனை மின் நூல் ஆக்கினால் இவர்களுக்கு கேள்விகளை தேர்வில் கேட்பது போல் கொள்குறி வகையில் வினாக்களை அமைக்க இயலும்.
  2. அரசு வேலைக்காகத் தாயராகும் இளைஞர்களுக்கு பல்வேறு அரசுப் பணிகளுக்காகத் தயாராகும் இளைஞர்களுக்கும் இது நிச்சயம் பயன்படும் . குறிப்பாக TNPSC, TET தேர்வர்களுக்கு. பல மென்பொருள்கள் கட்டற்ற உரிமத்தில் உங்களைப் போன்றோர்கள் வழங்கிக் கொண்டிருக்கையில் ஒன்றாம் வகுப்பிற்கான நோட்ஸ் கூட எங்கும் இலவசமாக கிடைப்பதில்லை என்பதில் இருந்தே கல்வியில் கட்டற்ற உரிமத்தின் தேவையினை அறியலாம்.

    தற்போது இதில் ஈடுபட எங்களது [சில ஆசிரிய நண்பர்கள் ](https://docs.google.com/spreadsheets/d/1gg_7SmtKlSW5eDFsPp4nModzea9fjqRDZLvGjdkTIDQ/edit?usp=sharing)விருப்பம் தெரிவித்து உள்ளனர்.