KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

தமிழ்க்கணிமை வரலாறு, பங்களித்தோர் பட்டியல் தயாரித்தல் #149

Open tshrinivasan opened 3 years ago

tshrinivasan commented 3 years ago

தமிழ்க்கணிமை பெரும் வரலாறு கொண்டது.

இணையத்தின் பல்வேறு பக்கங்களில் அதன் வரலாறும் பங்களித்தோரின் பேருழைப்பும் பரவியிருக்கும்.

அவற்றை இங்கே தொகுக்கலாம் வாருங்கள்.

உங்களுக்குத் தெரிந்து தமிழ்க்கணிமைக்கு பங்களித்த தனியார், அமைப்புகள், நிறுவனங்களின் பெயர், பங்களிப்பு விவரம், ஆண்டு, இணைப்புகள் ஆகியவற்றை இங்கே எழுத வேண்டுகிறேன்.

சிறு பங்களிப்போ, பெரும் பங்களிப்போ அனைத்தையும் தொகுப்போம்.

கால வெள்ளத்தில் பல தனியுரிமை மென்பொருட்கள் காணாமல் போயிருக்கலாம். அவற்றின் விவரங்களையும் தொகுப்போம். எத்தனை முயற்சிகளை மீண்டும் மீண்டும் பலர் முதலில் இருந்து தொடங்குகிறோம் என்று உணர இயலும்.

எழுத்துருக்கள், விசைப்பலகை, குறியாக்கம், தமிழ் நூல் அச்சு வசதிகள், ஆவணமாக்கம், கணினி சார் தமிழ் அச்சு நூல்கள், மின்னூல்கள், இதழ்கள், வலைப்பதிவுகள், வலைத்தளங்கள், திரட்டிகள், சமூக வலைத்தளங்கள், மென்பொருட்கள், பல்வேறு மென்பொருட்கள் இடைமுகப்பு தமிழாக்கம், விக்கி பங்களிப்பாளர்கள், மின்னஞ்சல் குழுக்கள், இன்னும் பல முயற்சிகள், பணிகள் நடந்துள்ளன.

உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் இங்கே எழுதுங்கள். தெரிந்தோரையும் எழுதச் சொல்லுங்கள்.

இதன் மூலம் தமிழ்க்கணிமையின் வரலாற்றின் பல்வேறு சீரிய வளர்ச்சியை ஆவணப்படுத்த வேண்டுகிறோம்.

நன்றி