KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
37 stars 3 forks source link

யுனஸ்கோ கூரியர் இதழ் ஆவணபடுத்தல் காப்புரிமை ஆய்வு #212

Open gnuanwar opened 2 months ago

gnuanwar commented 2 months ago

image

https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1kZp1

gnuanwar commented 2 months ago

Capture1

gnuanwar commented 2 months ago
    உலகைக் காட்டும் ஜன்னல்

யுனஸ்கோ கூரியர்

ஏப்ரல் 1968 APRIL 1968 No.10 யுனெஸ்கோவுடன் கூட்டுறவுக்கான இந்திய தேசியக் குழுவுடன் செய்துகொண்டுள்ள ஏற்பாட்டின்படி தென் மொழிகள் புத்தக டிரஸ்டினால் வெளியிடப்படுகிறது

யுனஸ்கோவினால் பதினோரு பதிப்புகளாக வெளியிடப்படுகிறது

1) ஆங்கிலம் 2) ஃபிரெஞ்சு 3) ஸ்பானிஷ் 4) ரஷ்யன் 5) ஜெர்மன் 6) அராபிக் 7) அமெரிக்க ஐக்கிய நாடு 8) ஜப்பானிஸ் 9) இத்தாலியன் 10) ஹிந்தி 11) தமிழ்

- விற்பனை, வினியோக அலுவலகம்: 441, பூந்தமல்லி ஹைரோடு, சென்னை-10. ஆண்டுச் சந்தா ரூ.10.50

- யுனெஸ்கோ கூரியர், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தவிர

மாதந்தோறும் வெளியிடப் படுகிறது. அக்டோபர் நவம்பரில் ஒரே இதழாக வெளிவரும் ஆண்டுக்கு 11 இதழ்கள்)

- காப்பி ரைட் அல்லாத தனிப்பட்ட படங்களையும், கட்டுரைகளையும் யுனெஸ்கோ கூரியரிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டது என்ற அறிவிப்புடன் இதழ் தேதியைக் குறிப்பிட்டு பிரசுரித்துக் கொள்ளலாம்.

- அவ்வாறு பிரசுரித்த இதழின் மூன்று பிரதிகள் ஆசிரியருக்கு அனுப்பப்பட வேண்டும். ஆசிரியர் பெயருடன் கூடிய சுட்டுரை களைத் திரும்பப் பிரசுரிக்கும் போது அதில் ஆசிரியர் பெயர் இடம் பெற வேண்டும்.

காப்பீ ரைட் அல்லாத போட்டோக்கள் வேண்டுவோ ருக்கு அனுப்பித் தரப்படும். கேட்டுப் பெருத கட்டுரைகளைப் போதிய தபால் தலை இல்லாமல் திருப்பியனுப்ப இயலாது.

ஆசிரியர் பெயருடன் கூடிய கட்டுரைகள் அவரது கருத்தை வெளியிடுவ தாகும். யுனெஸ்கோவின் அல்லது யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்களின் கருத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆசிரியர் அலுவலகம்: யுனெஸ்கோ, பிளேஸ் த ஃபான்டினாய் பாரிஸ் - 7. ஃபிரான்ஸ். பிரதம ஆசிரியர்: ஸாண்டி காஃப்ளர் உதவிப் பிரதம ஆசிரியர்: ரெனி காலோஸ் பிரதம ஆசிரியருக்கு உதவியாளர்: லூஸியோ அட்டினெல்லி நிர்வாக ஆசிரியர்கள்: ஆங்கிலப் பதிப்பு: ரொனால்ட் ஃபென்டன் (பாரிஸ்) ஃபிரெஞ்சுப் பதிப்பு : ஜேன் ஆல்பர்ட் ஹெஸ்ஸே (பாரிஸ்) ஸ்பானிஷ் பதிப்பு: அர்ட்டுரோ டெஸ்பூயே (பாரிஸ்) ரஷ்யன் பதிப்பு : விக்டர் கோலியச்காவ் (பாரிஸ்) ஜெர்மன் பதிப்பு : ஹான்ஸ் ரீபன் (பெர்ன்) ராபிக் பதிப்பு : அப்தல் மோனிம் எல் ஸாவி (கெய்ரோ) ஜப்பானிஸ் பதிப்பு: ஷின் -இச்சி ஹஸகாவா (டோக்யோ) இதாலியப் பதிப்பு : மரியா ரெமிட்டி (ரோம்) இந்திப் பதிப்பு : ஏ. சந்திரஹாஸ் (டில்லி) தமிழ் பதிப்பு : எஸ். கோவிந்தராஜுலு (மதறாஸ்) ஆராய்ச்சி: ஓல்கா ரோடல் அமைப்பு, சித்திரம்: ராபர்ட் ஜாகுமின் எல்லாக் கடிதங்களும் பிரதம ஆசிரியர் விலாசத் துக்கே எழுதப்பட வேண்டும்.

gnuanwar commented 2 months ago

யுனஸ்கோ கூரியர் இதழ் விக்கிபீடியா பக்கம்

https://ta.wikipedia.org/s/434i

யுனெஸ்கோ கூரியர் மாத இதழ் ஐக்கிய நாடுகள் அவையின், சகோதர நிறுவனமான யுனெஸ்கோவின் சார்பில் உலகின் பல முன்னணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்படும் இதழாகும். இப்பன்னாட்டு மாத இதழ் 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளிவந்தது 2001 ஆண்டு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. இதழ் துவக்கம்

1966இல் பாரிஸ் நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில் வாழும் தமிழர்களுக்குக் கூரியரின் சேவை தேவை என்பதை உணர்ந்தார். கூரியர் தமிழிதழ் துவக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். அதே ஆண்டில் மால்கம் இந்தியா வந்தார். அவருக்கு நடைமுறை சிக்கல் ஒன்று ஏற்பட்டது. யுனெஸ்கோவில் உறுப்பினராக இருப்பது இந்தியாதான். இந்தியாவில் ஒரு மாநிலம்தான் தமிழகம். எனவே நடுவணரசிடம் பேச்சு நடத்தவேண்டி இருந்தது. தமிழில் இதழ் ஆரம்பிக்க மறுப்பில்லை. ஆனால் இந்தியிலும் கூரியர் வெளியாக வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்தி மொழி கூரியருக்கான ஏற்பாடுகளைச் செய்தபின்பு மால்கம் சென்னை திரும்பினார். அன்றைய தமிழக முதல்வரான அண்ணா, கல்வியமைச்சரான நெடுஞ்செழியன் ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது.[1] ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் தவிர, அரபி, சீனம் ஆகிய செம்மொழிகளில் மட்டுமே வெளிவந்த யுனெஸ்கோ கூரியர் இதழ், தமிழில் வெளிவந்தது என்பது தமிழுக்கான உலகளாவிய நிகழ்வாகப் பதிவு செய்யத்தக்கது. மணவை முஸ்தபா ஆசிரியராக இருந்தபோது தமிழ்ப் பதிப்பு 5 லட்சம் பிரதிகள் விற்று யுனெஸ்கோ இதழ்களில் நான்காம் இடத்தை பிடித்திருந்தது.[2] யுனெஸ்கோ கூரியரின் சிறப்பு

உலகில் உள்ள அனைத்து விசயங்கள் பற்றியும் யுனெஸ்கோ கூரியரில் படைப்புகள் இடம்பெறும். ஆனால் அரசியல் விசயங்கள் தவிர. மற்ற இதழ்களைப் போலத் தனியொரு நாட்டு வாசகர்களுக்கோ, அல்லது ஒருசில நாட்டு வாசகர்களுக்கோ கூரியர் உருவாக்கப்பட்டதில்லை. மாறாக உலக நாடுகளின் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இதழிலும் ஒரு மையக்கருவை அலசி ஆராய்து அதை அடிப்படையாக கொண்டே வெளிவந்தது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டு மொழிபெயர்த்துத் தரப்பட்டது. பாரீஸ் தலைமையகத்தில் கூரியர் பதிப்புகளின் ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான தலைப்புகளை முடிவு செய்து வருவர்.[3] பல்லாயிரக்கணக்கான புதிய புதிய கலைச் சொற்களைக் கூரியர் இதழ் தமிழுக்கு உருவாக்கித் தந்தது. யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்கள்

யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், நெ. து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்

1984 ஆண்டு மார்ச் கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இது தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழ் ஆகும். அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு-தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ ஆவார் இவர் அந்த இதழில், 'சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா) , சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு விவரிப்பை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது. தமிழ் பதிப்பு நிறுத்தம்

1967இல் துவக்கப்பட்டு பல்வேறு தடைகளைத் தாண்டி 35 ஆண்டுகள் வெளிவந்த தமிழ் பதிப்பு, நிதி நெருக்கடியைக் காட்டி நிறுத்தப்பட்டது. மேற்கோள்கள்

"யுனெஸ்கோவின் தமிழ்க் கொடை!". தினமணி. 17 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு] "மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன்". கட்டுரை. தி இந்து. 7 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help) தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 12

gnuanwar commented 2 months ago

@Natkeeran @tshrinivasan PLEASE YOUR VIEWS ON COPY RIGHT

Natkeeran commented 2 months ago

@gnuanwar Looks like they have made it available under CC-BY-SA for other languages: https://unesdoc.unesco.org/search/7a167f2f-e22e-4ec5-8b43-8fb905e73d25

"The text of The UNESCO Courier is available in Open Access under the Attribution-ShareAlike 3.0 IGO (CC-BY-SA 3.0 IGO) license, in the context of UNESCO's open access publications policy. This dataset is published under the most recent version of the same license: Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0 Deed)."