KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

புதுக்கோட்டை ஞானாலயா நூல்களை scan செய்தல் #3

Open tshrinivasan opened 5 years ago

tshrinivasan commented 5 years ago

புதுக்கோட்டை ஞானாலயா நூல்களை scan செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மரபு அறக்கட்டளை சுபாஷினி அவர்களும், ஹார்வார்டு தமிழ் இருக்கைக்குழுவின் பேரா. ஜானகிராமன் அவர்களும் நூலகத்தை பார்வையிட்டனர்.

24.11.2018 அன்று சுபாஷினி அவர்களை சந்தித்து, தேவையான பொருட்கள், ஆட்கள், பணிகளைத் திட்டமிட்டேன்.

கணியம் அறக்கட்டளை சார்பில், லெனின் குருசாமி இயங்குவார்.

அங்கே சுமார் 1,50,000 புத்தகங்கள் இருக்கலாம். பொதுக்கள நூல்கள், அரிய நூல்களை முதலில் மின்னூலாக்கம் செய்து PDF வடிவில் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்.

Fujitsu ScanSnap SV600 Scanner கொண்டு, ஒரு மாதத்தில் சுமார் 30,000 பக்கங்களை வருட இயலும். https://www.amazon.in/Fujitsu-PA03641-B301-ScanSnap-SV600-Scanner/dp/B01AJI0426

திட்டத்துக்கான தொகையை ஏற்பாடு செய்தபின், மார்ச் 2019 ல் திட்டம் தொடங்கி, ஒரு வருட காலம் செயல்பட முடியும். கூடுதல் தொகை கிடைக்குமெனில், பிறகு திட்டத்தை தொடரலாம்.

இவ்வாறு முடிவு செய்தோம்.

வேறு ஏதேனும் திறம்மிக்க scanner உண்டா என்று ஆராய வேண்டும்.

அடுத்த செயல்பாடுகள், திட்டங்களை இங்கே பகிர்வேன்.

gnuanwar commented 5 years ago

ஒளி வருடி கருவியை வாங்கும் முன்பு அய்யா பொள்ளாச்சி நசன் அவர்களிடம் ஒரு விரிவான கலந்துரையாடல், ஆலோசணை கேட்க்கவும் இந்தியாவில் கிடைக்கும் ஒளிவருடிகளை வாங்கலாம் தமிழ் இணையபல்கலை கழகம்,ரோஜா முத்தையா நூலகம் இவற்றை நேரில் கண்டு தேர்வு செய்யலாம்

gnuanwar commented 5 years ago

நமது freetamilebooks.com நூல்களையும் இதில் ஒளிவருட உடன்படிக்கையில் சேரக்கலாம் இதில் வியாபார ரீதியாக செய்தால் அது நமது அறக்கட்டளை நிதியாகவும் சேர்க்கலாம்