Open tshrinivasan opened 5 years ago
தமிழ் மண் பதிப்பகத்தாரின் நூல் பட்டியல் இங்கே.
இன்று சென்னை புத்தக கண்காட்சியில் தமிழ்மண் பதிப்ப உரிமையாளர் இளவழகன் அவர்களை சந்தித்தேன். நமது பணிகளை விளக்கினேன். வியந்து வாழ்த்தினார். கூடுமான வரையில் குறைந்த விலையில் அவரது நூல்களை ஒருங்குறி வடிவில் தர உறுதி கூறினார்.
புத்தக கண்காட்சி முடிந்த பின், அவரை சந்திக்கத் திட்டமிட்டோம்.
தமிழ் மண் பதிப்பகத்தாரின் பட்டியல் - தொகுப்பு வடிவில் இங்கே
தமிழ் மண் பதிப்பகத்தாரின் பட்டியல் - விரிவான வடிவில் இங்கே
இன்று இளவழகனார் அவர்களை சந்தித்தேன். நமது செயல்கள், FreeTamilEbooks.comமின்னூல்கள், கி.கா உரிமைகள் பற்றி விவரித்தேன். மிகவும் மகிழ்ந்து, ரூ 5 லட்சம் போதுமென்றார். அனைத்து நூல்களும் ஒருங்குறியில் வேர்டு ஆவணமாகவே உள்ளன. சில மின்னூல்களை சோதித்தேன். லதா எழுத்துருவிலேயே உள்ளன.
நன்கொடை பெறுவதற்கான திட்ட அறிக்கை உருவாக்குவதாய் சொன்னேன். அவரிடம் காட்டி, ஒப்புதல் பெற்று, பின் கணியம் தளத்தில் வெளியிடலாம்.
அவர் பதிப்பித்தவை 655 நூல்கள். அவற்றில் பெரும்பாலானவை நாட்டுடைமை நூல்களே. அவ்வாறு அல்லாத நூல்களின் உரிமை அவரிடம் உள்ளது. உரிய நூலாசிரியர்/குடும்பத்தாருடன் பேசி, Public domain உரிமையில் வெளியிட அனுமதி வாங்கித் தருவதாய் கூறினார்.
மூன்று மாதங்களில் 5 லட்சம் நன்கொடை பெற்று வருவதாய் கூறியுள்ளேன்.
அருமை!
https://docs.google.com/document/d/1ZLLFaoh3KcL0EzxcfeThs4_GKmWxTrpQq0lwgEZlpTU/edit?usp=sharing நன்கொடை வேண்டுகோளை இங்கே எழுதி வருகிறோம். திருந்திய பதிப்பை விரைவில் வெளியிடுவோம்.
இன்று இளவழகனார் அவர்களை சந்தித்தேன். மேற்கண்ட ஆவணத்தில் சில திருத்தங்கள் சொன்னார்.
1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல் http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/
இங்கு நன்கொடை வேண்டியுள்ளோம்.
முதல் கட்டமாக ரூ 50,000 தந்து 100 மின்னூல்களைப் பெற்றுள்ளோம்.
அவற்றை மின்னூலாக்கம் செய்து வெளியிடுவது பற்றி ஆய்ந்து வருகிறோம்.
http://www.ulakaththamizh.in/book_all
Found the PDF/Images for these books are available here. If required, we can download them.
UTSC Canada agreed to give a grant to purchase all the 1000 ebooks. Planning on receiving foreign fund to buy these 1000 ebooks.
கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் - டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவற்றுக்கான பொது அறிவிப்பை வெளியிடுவோம்.
3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.
தமிழ்மண் பதிப்பகத்தில், நல்ல புத்தகங்கள், அங்கு வரும்பொழுதெல்லாம் அங்குதான் சென்று புத்தகங்கள் வாங்குவேன். நல்லது இங்குப் பணம் திரட்ட முயல்கின்றேன்.
http://www.ulakaththamizh.in/book_all
Found the PDF/Images for these books are available here. If required, we can download them.
A lot of interesting books, thanks for the link. Tamil Virtual Academy too has a lot of good books. If a OPDS file is published for this listings, book discovery will become easy from e-readers like Calibre Ebook App. Interested volunteers can explore this. Thanks. https://en.wikipedia.org/wiki/Open_Publication_Distribution_System
கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் - டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவற்றுக்கான பொது அறிவிப்பை வெளியிடுவோம்.
3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம்.
Fine effort, kudos to all those who made it possible. Has there been a progress on this?
We are tagging all the book's content in markdown syntax and little latex for fine epub, mobi, pdf, html, txt exports.
https://github.com/tshrinivasan/make_ebooks https://github.com/tshrinivasan/make_ebooks/blob/master/custom-markdown.txt
Here is the current status.
Total Tagged Books - 781 Total Books completed and uploaded in private drive - 175 ( QA process pending ) Total books to be tagged - 384
We are tagging all the book's content in markdown syntax and little latex for fine epub, mobi, pdf, html, txt exports. https://github.com/tshrinivasan/make_ebooks https://github.com/tshrinivasan/make_ebooks/blob/master/custom-markdown.txt Here is the current status. Total Tagged Books - 781 Total Books completed and uploaded in private drive - 175 ( QA process pending ) Total books to be tagged - 384
thanks. happy to note the progress. all the best. please look into publishing an OPDS file too once they are released.
Sure. Will do sir.
We are exploring for providing OPDS for FreeTamilEbooks.com too https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/68
தமிழ்மண் பதிப்பகத்தார், நாட்டுடைமை நூல்கள், அரிய தமிழ் எழுத்தாளர்களில் நூல்களை அச்சுக்குந்த நிலையில் வைத்துள்ளனர்.
சுமார் 2,15,000 பக்கங்கள் இருக்கும்.
அவற்றை மொத்தமாக யாராவது வாங்கிக் கொண்டால், தந்து விடுவதாக கேள்விப்பட்டேன். தட்டச்சு செலவாக பக்கத்துக்கு ரூ 15 எனில், சுமார் 30 லட்சம் ஆகும்.
இதை திரட்ட முடிந்தால், தமிழின் அரிய பல பொக்கிசங்களை இலவசமாக அனைவருக்கும் தரலாம்.