KaniyamFoundation / ProjectIdeas

A Place to write down the project ideas and to plan them
40 stars 3 forks source link

பதிப்புரிமை முடிந்த நூல்களை மின் நூலாக்கம் செய்தல் #64

Open gnuanwar opened 5 years ago

gnuanwar commented 5 years ago

தமிழக அரசு நாட்டுடமை நூல்களை இந்த தளத்தில் வரிசைபடுத்தி உள்ளது http://www.tamilvu.org/ta/library-libcontnt-273141இது போக பதிப்புரிமை முடிந்த நூல்களை நமது freetamilebooks.com தளத்திலும் மேலும் archive.org தளத்தில் ஆவணபடுத்தி நமது சேகரிப்பிலும் சேர்க்கலாம். இந்த திட்டத்தில் அ.மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் நூலில் இருந்து தொடங்குவோம். சுவையான செய்திகள்

"1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார்.
1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது."

இந்த நூல் 3பாகங்களை கொண்டது இது இப்போது அச்ச்சில் கிடைக்கிறது. இதனை நாம் வாங்கி ஒளி வருடல் செய்து எழுத்துணரி செய்து வெளியிடலாம். @tshrinivasan இந்த திட்டத்தில் புதிய repository உருவாக்கவும்

tshrinivasan commented 5 years ago

https://github.com/KaniyamFoundation/Proofread-Works/

use this repository for this works.